மட்டக்களப்பில் இரு கையடக்க தொலைபேசி கடைகளில் கொள்ளை
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பூட்டியிருந்த இரண்டு கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களின் கூரையை உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான 35 கையடக்க தொலைபேசிகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள இரண்டு கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை வழமைபோல சம்பவதினமான நேற்று இரவு கடை உரிமையாளர்கள் பூட்டிவிட்டு வீடு சென்று இன்று காலையில் கடையை திறந்தபோது கடையின் கூரையை உடைத்து கடைகளுக்குள் கொள்ளையர்கள் இறங்கி அங்கிருந்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு
பொறுப்பதிகாரி வை. விஜயராஜ தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவை சோதனையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
