போதைப்பொருள் பாவனையை கண்டறிய நடமாடும் பேருந்து சேவை
பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய நடமாடும் சோதனை பேருந்தொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தால், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில், நேற்று (24.11.2025) மாக்கும்புர பல் போக்குவரத்து மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நடமாடும் பேருந்து, நாடு முழுவதும் பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை தேர்ந்தெடுத்து சோதனைகளை நடத்தவுள்ளது.

நடமாடும் சேவை
பணியில் இருக்கும்போது எந்தவொரு ஊழியரும் போதைப்பொருளுக்கு ஆளாகியுள்ளாரா என்பதைத் தீர்மானிக்க இந்த சோதனைகள் உதவும்.
முதல் கட்டத்தில் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
பின்னர் பிற வாகனங்களின் சாரதிகளுக்கும் சோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.