26 சிறு நகரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'மிதுரு புரவர' (நட்பு நகரங்கள்) கருத்திட்டத்தின் கீழ் 26 சிறு நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதற்கான முன்மொழிவை அமைச்சரவைப் பத்திரமொன்றினூடாகச் சமர்ப்பித்திருந்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, நகர அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் 'மிதுரு புரவர' (நட்பு நகரங்கள்) என்ற அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கை
பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் வசதி மற்றும் நல்வாழ்வுக்காக சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டமானது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 நகரங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அத்தியாவசிய அபிவிருத்தித் திட்டத்தை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்குள் திட்டத்தை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நட்பு நகரங்கள் திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் செயல்படுத்த அடையாளம் காணப்பட்ட 23 நகரங்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 581 மில்லியன் ரூபா மதிப்பிலான தொகையை "க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யவும், அதனூடாக நட்பு நகரங்கள் கருத்திட்டத்தை முன்னெடுக்கவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam