கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் காணாமல் போன 27வயதான இளைஞன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு ஐந்து நாட்கள் இருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
காணாமல்போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞரைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இளைஞரின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, 27வயதான குறித்த இளைஞன் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஸ்