மனைவியை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு செய்த கணவன்
உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியை காணவில்லை என அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி கடந்த 13ஆம் திகதி மாலை அவரது தாயாரின் வீட்டிலிருந்து உறவுக்காரர் வீட்டிற்கு சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
குறித்த நேரத்தில் நான் உறங்கிக்கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை.
எனினும் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராதமையினால் அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் உறவினர் வீடுகளில் சென்று பார்த்த போது அவர் அங்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
அவரது தொலைபேசியும் இயங்கவில்லை. இந்நிலையில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri