டைட்டன் நீர்முழ்கி கப்பல் இப்படித்தான் வெடித்திருக்கும்! வைரலாகும் அதிர்ச்சி காணொளிகள்
டைட்டன் நீர்முழ்கி கப்பல் எப்படி வெடித்திருக்கும் என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய, டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் நேற்று(22.06.2023) கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.2023) முதல் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலின் அழுத்தம் தாங்காமல் உள்நோக்கி வெடித்திருக்கலாம் (implosion) என நம்பப்படுகிறது.
இந்த விபத்தில், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் இவர்கள் அனைவரும் ஒரு நொடியில் இறந்திருக்கலாம் என்று அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் என்ன நடந்திருக்கும், விபத்து நடந்திருந்தால் அது எப்படி நடந்திருக்கும் என அறிந்துகொள்ள டைட்டன் நீர்முழ்கி கப்பலின் பாகங்களை சில மீட்பு பணியாளர்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
ஐவர் உயிரிழப்பு
இதனிடையே, காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் சாத்தியக்கூறு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி ரியர் அட்மிரல் ஜான் மாகர், இதுவரை கண்டெடுக்கப்பட்ட நீர்முழ்கி கப்பலின் பாகங்கள், அழுத்தத்தால் ஏற்படும் வெடிப்புடன் ஒத்துப்போகின்றன என்று கூறியுள்ளார்.
குறித்த நீர்மூழ்கி கப்பலில், பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான்-பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலேமான் தாவூத், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் துணை இயக்குனரான OceanGate Expeditions-ன் CEO ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டைட்டன் நீர்முழ்கி கப்பல் இப்படிதான் வெடித்திருக்கும் என்பதைக் காட்டும் வகையிலான சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
? Breaking News
— WOLF™️ (@thepakwolf) June 22, 2023
All five people onboard on #Submersible are all very sadly died, #OceanGate confirms. This video shows how the accident happened with the submarine. ?#Titanic #Titan pic.twitter.com/W82X9OawuD
Credit to @ sincerelybootz on TikTok
— ⚡Publicly Buzzed⚡ (@PubliclyBuzzed) June 22, 2023
Haunting spectacle of an implosion. Still Best Case Scenario
#implosion #Titan #titanicsubmarine #TitanSub pic.twitter.com/C6PTtX6fwr
Here’s an example of what the implosion of the Titan submersible would have looked like. Potentially even more violent given the depths of the mission. #Titan #Titanic #OceanGate #implosion #submarine #submarinemissing pic.twitter.com/1hZTjlxOMg
— Messias (@honestfan_1) June 23, 2023
To put the submarine implosion into perspective.. #submarine #titan #titanic #oceangate pic.twitter.com/SW7GpEKJ7M
— wolf (@nomanners21) June 22, 2023
