டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவர் உயிரிழப்பு
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
குறித்த விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையிலே நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த ஐவரது உடல்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
The five people aboard a missing submersible died in what appears to have been a 'catastrophic implosion,' a US Coast Guard official said, bringing a grim end to the massive international search for the vessel that was lost during a voyage to the Titanic https://t.co/wipUWoY68S pic.twitter.com/MP0F10ljd7
— Reuters (@Reuters) June 22, 2023
முதலாம் இணைப்பு
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளது.
நிபுணர்கள் ஆய்வு
இதை அடுத்து காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவை களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் அருகே உள்ள சுற்றுப் பகுதியில் சிதைந்த நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவை,எத்தகைய குப்பை களம் என்பது குறித்து நிபுணர்கள் ஆராய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
