நானுஓயாவில் காணாமல்போன மாணவன் நீர்கொழும்பில் மீட்பு
நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் காணாமல்போயிருந்த 12 வயது மாணவனான மகேந்திரன் ஆசான் நேற்றிரவு நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அயல் வீட்டில் உள்ள நபர் ஒருவரே இச் சிறுவனுக்குத் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றி, நானுஓயாவிலிருந்து ரயில் மூலம் நீர்கொழும்புக்கு அனுப்பியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவன், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் இருப்பதைக் கண்ட உறவினர் ஒருவர், அவரை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளார்.

சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை
காணாமல்போன சிறுவன் நீர்கொழும்புப் பகுதியில் இருக்கின்றார் என்று நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக நானுஓயா பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சிறுவனை நீர் கொழும்புக்கு அனுப்பிவைத்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri