வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற முதியவரை காணவில்லையென முறைப்பாடு
வவுனியா - கோவில்குளம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகவீனமடைந்திருந்த குறித்த முதியவர் வீட்டிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் செல்வதாகத் தெரிவித்துச் சென்றுள்ளார். எனினும் பல நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் யாழ்.நல்லூர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் நல்லூர், மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 66 வயதான அன்ரன் விஐயகுமார் என்ற முதியவரே காணாமல்போயுள்ளார்.
அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் குறித்த தொலைபேசி இலக்கங்களிற்குத்
தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam