முடிவில்லா புதைகுழி! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் அதிரடி அறிவிப்பு
ஈரானிய உயர்மட்ட அதிகாரி ஒருவர், அமெரிக்கா ஒரு முடிவில்லாத புதைகுழியில் (endless quagmire) சிக்கிவிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf), 'எக்ஸ்' (X) சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அவர், "தவறான உத்திகளும், அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளும் ஒட்டுமொத்த நிலைமையையும் மோசமானதாக மாற்றிவிடும்" என்று கூறியுள்ளார்.
வித்தியாசமான ஈரான்
மேலும், இந்த முடிவுகள், "எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் சந்தைகளையும் வெடித்துச் சிதறச் செய்யலாம்" என்றும், இதன் மூலம் நீங்கள் பல ஆண்டுகளாக மாட்டிக்கொள்ளும் ஒரு முடிவில்லாத புதைகுழியை உருவாக்கலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவின் முடிவில், "நீங்கள் ஒரு வித்தியாசமான ஈரானைக் காண்பீர்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை "இன்றிரவு மிகக் கடுமையாகத் தாக்குவோம்" என்றும், அதன் கார்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கின்றது.
பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்