காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் வெளியான தகவல்
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் மாணவன், கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் அவரை கண்டுபிடிப்பதற்காக 2 விசேட பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
குறித்த மாணவன் காணாமல்போனதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன மூன்றாவது பல்கலைக்கழக மாணவர் இவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரை மாய்க்கும் மாணவர்கள்
காணாமல்போன இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மகாவலி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுடன் அவர்களின் சடலங்களும் பின்னர் கண்டெடுக்கப்பட்டன.
கடவத்தை கணேமுல்ல வீதியைச் சேர்ந்த புலஸ்தி பிரமுதித பெரேரா என்ற 25 வயதுடைய மாணவனே கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இந்த மாணவன் காணாமல்போவதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அந்த நிலையில் இருந்து மீள சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்து இல்லாத இடத்தில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காதலின் விபரீதம்
காதல் உறவின் காரணமாக தாம் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த பல்கலைக்கழக மாணவன் கடிதத்தில் எழுதியுள்ளார்.
எப்படியிருப்பினும் காணாமல்போன மாணவனைக் கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர் சென்று வந்த இடங்கள் தொடர்பில் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா அமைப்புகள் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களை முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் நேற்று மாலை வரை இந்த மாணவன் குறித்த எந்த தகவலையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
