நீர்கொழும்பில் காணாமல்போன கைதி வெலிக்கடையில் கண்டுபிடிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயிருந்த கைதியொருவர் நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜுலை 05,06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது 26 வயதுடைய கைதியொருவர் காணாமல்போயிருந்தார்.
சிறைச்சாலை ஆவணங்களின் பிரகாரம் மட்டுமன்றி நீர்கொழும்பு சிறைச்சாலையின் பதிவேடுகளின் பிரகாரம் அவர் தொடர்ந்தும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிக்கு என்ன நடந்தது
எனினும் அவரது பெற்றோர் பல தடவைகள் தமது புதல்வனை பார்வையிட நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சென்றபோதும் அவர் அங்கில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கைதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய மேலதிக தகவல்களை வழங்கவும் சிறைச்சாலை நிர்வாகம் தவறியுள்ளது.
இதனையடுத்து குறித்த கைதியின் பெற்றோர் காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றின் ஊடாக மேற்கொண்ட முயற்சியின் பிரகாரம் அவர்களது புதல்வன் தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாக வயோதிப பெற்றோர் சுமார் இரண்டு மாதங்கள் அநாவசிய மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறைச்சாலைக் கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு கண்ட்னம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியினரால் கைது
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24