காணாமல்போன ஆணொருவர் ஆற்றில் சடலமாக மீட்பு!
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முனைக்காடு,பெரியகளப்பு ஆற்றில் நண்பர்களுடன் நீராட சென்று காணாமல்போன ஆண் ஒருவர் நேற்று நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பிலுவில் முனை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு சம்பவதினமான வியாழக்கிழமை (13) முனைக்காடு ஆற்றுபகுதிக்கு சென்று அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு மது அருந்தி ஆற்றில் நீராடி களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது நேற்று முதல் காணாமல்போன நபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நீரில் மிதப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



