கனடாவில் காணாமல் போன தமிழர் - பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபர் தொடர்பான முழு தகவல்களை டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, 55 வயதான ஹரிஹரன் விஸ்வலிங்கம் என்ற நபர் கடைசியாக கடந்த மே மாதம் 31ஆம் திகதி காணப்பட்டார். கிப்லிங் சுரங்க நிலையத்தில் ஹரிஹரன் கடைசியாக காணப்பட்ட பின்னர் காணமல் போயுள்ளார்.
தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை
அவர் அடிக்கடி TTC வாகனங்களில் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஹரிஹரன் சாதாரண உடல்வாகுடன் இருப்பார்.
காணாமல் போன போது அவர் எந்த நிறத்தில் மற்றும் எது மாதிரியான உடைகளை அணிந்திருந்தார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
இந்நிலையில், ஹரிஹரன் தொடர்பில் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri