முல்லைத்தீவில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்
முல்லைத்தீவு - மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு தொடர்பிலான விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றார்கள்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார். திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் சடலம் காணப்பட்டுள்ளது.
சடலத்திற்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் தூரம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமியின் சடலத்தினை அயல் வீட்டார் கோழியினை காணவில்லை எனத் தேடிச் சென்ற போதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாலியல் வன்புணர்வின் பின்னர் வேறு இடத்தில்வைத்து கொலை செய்யப்பட்டு ஆட்கள்
இல்லாத இடத்தில் கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
