மூன்று பிள்ளைகளின் தந்தையை மூன்று வருடங்களாக காணவில்லை: மனைவி முன்வைத்துள்ள கோரிக்கை(Photos)
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்மன்நகர் எனும் கிராமத்தில் வாசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று வருடங்களாகக் காணாமல் போயுள்ளதாக மனைவி சத்தியரூபன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2018.06.29ஆம் திகதி அன்று திருகோணமலை - கன்னியா என்ற இடத்திற்கு வேலைக்குச் சென்ற வேளையில் காணாமல் போயிருந்த நிலையில் இன்று மூன்று (03) வருடங்கள் கடந்தும் இன்னமும் வீடு திரும்பவில்லை.
இவர் தொடர்பாக சம்பூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அவர் கிடைக்கவில்லை.
எனவே இவரைப் பார்த்தாலோ அல்லது இவரைப் பற்றி தகவல் அறிந்தாலோ பின்வரும்
இலக்கத்திற்கு 0779896137 அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்







தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
