கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி - பொலிஸார் அவசர கோரிக்கை
கனடாவில் காணாமல் போன 15 வயதான தமிழ் சிறுமி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி, குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளுமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Missing 15 yr old female from Markham Anjahnna Sakdivadivel. Long curly black hair, brown eyes, 5"3, 55kg, thin build, last seen wearing a grey hoody with black pants and black Nike shoes. Police and family are concerned for her safety. If located contact York Regional Police. pic.twitter.com/Ug6KvQhRCL
— YRP Duty Office (@YRPDutyOffice) October 3, 2022
நீண்ட சுருள் கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள், கருப்பு நிற பேன்ட் மற்றும் கருப்பு நைக் ஷூவுடன் சாம்பல் நிற ஹூடி அணிந்து கடைசியாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
