அம்பாறையில் காணாமல்போன 13 வயது சிறுவன் கண்டுபிடிப்பு
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) அவரது தாயிடமிருந்து மீட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தாயும்,தந்தையும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் தந்தையுடன் இருந்த சிறுவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரமுனையில் மரணவீட்டிற்கு அழைத்துச் சென்றபோது 13 வயதுடைய தீபன் சயான் என்ற சிறுவன் காணாமல்போயிருந்தார்.
இந்த சிறுவன் மரணவீட்டில் இருந்து தந்தையாருக்கு தெரியாமல் அவனது நண்பனின் உதவியுடன் வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்திலுள்ள தாயாரை தேடி சென்று அங்கு இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுவனை இன்று செவ்வாய்க்கிழமை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
