இந்திய கடற்படைக்கு வந்து குவியப்போகும் ஏவுகணைகள் - செய்திகளின் தொகுப்பு
இந்திய கடற்படைக்கு ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 இற்கும் மேற்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியான பிரமோஸ் ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.
பிரமோஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பறக்கும்.
இத்தகைய வலிமை மிக்க 200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.” என தெரிவித்துள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
