ஒரேஷ்னிக் ஏவுகணையின் அச்சநிலை: சர்வதேசத்தை உற்றுநோக்க செய்த புடீனின் அறிவிப்பு
சர்வதேசத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரேஷ்னிக் ஏவுகணை அமைப்பின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புடினின் இந்த அறிவிப்பானது யுத்தம் தொடர்பில் உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரேஷ்னிக் என்பது பேரழிவு ஆயுதம் அல்ல என்று புடின் கூறியுள்ளார். இது பொதுவாக அணு ஆயுதங்களை போலவோ, அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளிலிருந்து (ICBMs) வேறுபட்டது என விளக்கமளித்துள்ளார்.
உக்ரேனிய இராணுவம்
உக்ரேனிய இராணுவத்தின் கூற்றுப்படி, Oreshnik ஏவுகணையின் வேகம் மணிக்கு 12,300 km தூரத்தையும் தாண்டி பயணிக்க கூடியது என சுட்டிக்காட்டியுள்ளது.
இவை துணை வெடிமருந்துகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் இடைமறிப்பது மிகவும் கடினம் எனவும், ஏவுகணையின் வேகத்தினை தற்போதுள்ள வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் கண்டறியப்படுவதும் கடினம் எனவும் கூறப்படுகிறது.
4,000 டிகிரி செல்சியஸ்
இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நட்பு நாடுகளின் அமைப்பு உட்பட, யார் கூறினாலும் இதன் நகர்வை தடுக்க இயலாது என புடின் சவால் விடுத்துள்ளார்.
இது 4,000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |