யேமன் சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் - ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி
யேமனின் துறைமுக நகரமான ஏடனில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹுதி கிளர்ச்சியாளர்கள் பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும், இந்தத் தாக்குதல்களில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என உள்ளூர் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்
இந்த நிலையில், சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயற்படும் யேமன் அரசுப் படைகள், தைஸ் மாகாணத்தின் ஜபல் ஹபாஷி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக உயரமான மலைச் சிகரத்தை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “டான் ஒஃப் யேமன்” என்ற சிறப்பு இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரியாத்திற்கு வடக்கே ஏவப்பட்ட ஹுதிகளின் பெலிஸ்டிக் ஏவுகணையொன்றை சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் வானிலேயே இடைமறித்து அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா, சாடா மற்றும் அம்ரான் ஆகிய மாகாணங்களே சவூதி அரேபியாவை நோக்கிய ஏவுகணைத் தாக்குதல்களின் முக்கிய மையங்களாக செயற்பட்டு வருவதாக கூட்டணிப் படைகள் தெரிவித்துள்ளன.
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan