மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல்
தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23ஆவது நினைவு தினம் நேற்று புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில், மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு
உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பொது மன்னிப்பில் விடுதலை
மேற்படி நிகழ்வில் சமூகசேவகர் அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

கடந்த 20.12.2000 அன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை இலங்கை இராணுவம் கூரிய ஆயுதங்களால் குத்திப் படுகொலை செய்தது.
இந்நிலையில், மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிக்கு 25.06.2015 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அவர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan