தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் வாகனப் பேரணி : கஜேந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல்
தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் வாகன பேரணி ஒன்றை ஒழுங்கு செய்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹெல உறுமய கட்சியின் செயலாளர் அஞ்சனா சந்திரசிறியினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, இன்று (21.12.2023) கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அஞ்சனா சந்திரசிறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“செல்வராசா கஜேந்திரன், முன்னாள் போராளி தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் 17.09.2023 அன்று கிழக்கு மாகாணத்திலிருந்து வட மாகாணத்திற்கு வாகன பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.
பிரிவினை வாதத்துக்கு ஆதரவு
இது போன்ற பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்து அவர் பிரிவினை வாதத்தை நேரடியாக ஆதரித்துள்ளதோடு அரசியல் சாசனத்தின் 157 (ஏ) சரத்தையம் கடுமையாக மீறியுள்ளார்” என தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
