வற் வரி அதிகரிப்பு: மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 10000 மில்லியன் டொலர்களை சர்வதேச பிணைமுறியங்களிடமிருந்து கடனாக பெற்றது.
இதனால் தான் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு நலிவடைந்தது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஒருசில வாக்காளர்கள் கவனயீனமாக எடுத்த தீர்மானத்தின் பெறுபேற்றுடன் இன்றும் வாழ்கிறோம்.
மீண்டும் அவ்வாறான தவறான தீர்மானத்தை இந்த நாடு தாங்கிக் கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் 2024 ஆம் ஆண்டு வரிக் கொள்கை நாட்டின் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும்.
வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமான பொருளாதார கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதை குறிப்பிட வேண்டும். வரி குறைக்கும் போது தனிநபரும், நிறுவனங்களும் செலவு செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் நிதி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
