அறுவை சிகிச்சைக்கு 18 லட்சம்: அரசு ஆதரவு இல்லை என மின்னல் செந்தில் குற்றச்சாட்டு
ஒரு அறுவை சிகிச்சைக்கான தொகை 18 லட்சம் ரூபாய் என்றும், இதன் மூலம் மக்களின் உயிரை காப்பாற்றுவதே எங்களின் முக்கிய நோக்கம் என்றும் மின்னல் செந்தில் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் உயிரை காப்பாற்றுவதே எங்களின் நோக்கமாகும். இதற்காக 7000 டொலர் செலவு செய்கிறோம். இதனால் எங்களுக்கு எந்தவித இலாபமும் கிடையாது. அதே நேரத்தில், இதுபோன்ற உதவிகளை செய்ய அரசு தரப்பிலிருந்து எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாறாக, எங்களை எங்கள் போக்கில் செயல்பட விடுவதே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு மக்களுக்கு உதவி செய்யும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிலர் என்னிடம் “எனக்கு உயிர் தந்த நாள்” என்று கூறுவார்கள். அதை கேட்கும் போது மிகுந்த நிம்மதி கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் என்னென்ன விடயங்களை மின்னல் செந்தில் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதை கீழுள்ள காணொளியில் காணலாம்.