பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு திடீர் இடமாற்றம்
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னவுக்கு அரசாங்கத்தினால் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அவர் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கான பதவி நிலை குறித்து இதுவரை தெரிய வரவில்லை.
அமைச்சரவை மாற்றம்
பொதுநிர்வாக அமைச்சின் பதில் செயலாளராக அதன் தற்போதைய மேலதிக செயலாளர் கே.டி.என் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் பொதுநிர்வாக அமைச்சுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.