வலுசக்தி அமைச்சு பதவி தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரிடமே வலுசக்தி அமைச்சின் பொறுப்பை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்காமல் அமைச்சரவையில் உள்ள ஒருவருக்கே அந்தப் பொறுப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்
வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த வெள்ளிக்கிழமை (17) பதவி விலகியதையடுத்து அது வெற்றிடமாகவே உள்ளது.
ஆனால் பதவி விலகிய செயலாளரின் வெற்றிடத்திற்கு ஜே.எம்.ஆர்.டி. அபோன்சு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்தில் மேலதிக செயலாளராக பணியாற்றியவர்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகுவதாக அமைச்சர் குமார ஜயக்கொடி ஜனாதிபதிக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வலுசக்தி அமைச்சரின் இராஜினாமாவைத் தொடர்ந்து அரசியலமைப்பிற்கு இணங்க அந்த அமைச்சின் பணிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்இ ஜனாதிபதியினால் விரைவில் புதிய எரிசக்தி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan