நிதியமைச்சின் செயலாளர் தவறிழைத்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குற்றச்சாட்டு
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் ஒருவரை நியமித்த விடயத்தில் நிதியமைச்சின் செயலாளர் தவறிழைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக குஷான் ஜயசூரியவை நியமித்ததில் நிதியமைச்சின் செயலாளர், நிதி அமைச்சரையும் நாடாளுமன்ற சட்டவாக்க சபையையும் தவறாக வழிநடத்தி பொதுப்பயன்பாட்டுச் சட்டத்தை மீறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் நலன்களுக்கு முரணான ஒருவரை சபை உறுப்பினராக நியமிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு
குஷான் ஜயசூரிய மின்சாரத்துறையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையவர்
இது தொடர்பில், பெப்ரவரி 14ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர், நியமனக் கடிதம் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தை மீள அழைக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு இல்லை எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri