சுகாதார அமைச்சின் வாகனங்கள் மாயம்: கோபா குழுவில் குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (கோபா குழு) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில், பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல்திறன் குறித்து விசாரணை செய்ய சுகாதார அமைச்சகத்தின் தலைவர்களுக்கு கோபா குழு அழைப்பு விடுத்திருந்தது.
குறித்த சந்திப்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நிறுத்தப்பட்ட வருவாய் உரிமம்

இதற்கமைய அமைச்சின் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன நிர்வாகம் தொடர்பான தரவு அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் உண்மைகளை முன்வைத்துள்ளதாகவும் கோபா குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்த வாகனங்களில் 679 கார்களும், 1115 மோட்டார் சைக்கிள்களும் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான கார்கள் அமைச்சின் வசம் இல்லை என்பதை அறிந்ததும், வழங்குவதை நிறுத்துமாறு மோட்டார் போக்குவரத்து துறையிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த வாகனங்கள் தொடர்பான வருவாய் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோபா குழுவின் விசாரணை

இத்திட்டத்தின் மூலம் 425 வாகனங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர முடிந்தாலும், அவை ஏலம் விடப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கோபா குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 1115 மோட்டார் சைக்கிள்களில் பதினொரு மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இவற்றில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒப்பந்தத்தின் கீழ் கள அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதோடு, ஓய்வு பெற்ற பின்னர் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வாகனங்களில் பெரும்பாலானவை 1950 முதல் 1996 வரை பதிவு செய்யப்பட்டவை என்று கோபா குழு தெரிவித்துள்ளது.
வாகன நிர்வாக முறைமை தொடர்பில், கோபா குழுவின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சுகாதார அமைச்சின் தலைவர்கள், இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகனங்கள் காணாமல் போவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri