இராணுவ உறுப்பினருக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை
ஒழுக்காற்று அடிப்படையில் இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இந்த முன்னாள் சிப்பாய் ஒரு படைப்பிரிவு மையத்தின் இறப்பு நன்கொடை நிதியைக் கையாளும் பிரிவில் எழுத்தாராக பணிபுரிந்துள்ளார்.
இதன்போது உறுப்பினர்களுக்கான நிதியை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தனது சொந்தக் கணக்குகளுக்கு மோசடியாகத் திருப்பியதற்காக இராணுவ நீதிமன்றத்தின் மூலம், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஒழுக்காற்று அடிப்படையில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடிதங்களை போலியாக தயாரித்ததாக குற்ச்சாட்டு
எனினும் இராணுவத் தளபதியிடம் தம்மை மீண்டும் பணியமர்த்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தும் இதனை இராணுவ தளபதி நிராகரித்த போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது செயலாளர்களின் கடிதங்களை அவர் போலியாக தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் போலியான கடிதத்தலைப்புக்கள் மற்றும் கையொப்பங்கள் கொண்ட கடிதங்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குறித்த சிப்பாயை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து தனது கவனத்தை செலுத்துமாறு அவரிடம்; கோரப்பட்டுள்ளது.
எனினும் இந்த மோசடியும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், போலி கடிதங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடம் செயலாளர்கள் முறைப்பாடுகளை அளித்துள்ளனர். இதனையடுத்து இப்போது முன்னாள் இரர்ணுவ வீரர் தண்டனைக்கு தயாராகவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |