தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்
இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை.
கட்சியின் நிலைப்பாடு
அதனை நாம் ஆதரிக்கின்றோம். அதேபோல் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி அவசியம் என்ற நிலைப்பாட்டிலும் எமது கட்சி உறுதியாக உள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை ஜனாதிபதி இந்த வரவு - செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் உரையாற்றுகின்றாரா என்று எனக்குத் தோன்றியது.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் யோசனைகளை வரவு - செலவுத் திட்டத்தின் முன்வைத்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam