வடக்கில் இளஞ்செழியனால் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!
முதலமைச்சர் வேட்பாளராக நீதிபதி இளஞ்செழியன் களமிறங்கினால் தேசிய மக்கள் சக்திக்கே வெற்றிவாய்ப்பு என மூத்த ஊடகவியலாளர் பிரேம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தங்களுடைய கட்சி உறுப்பினர்கள் அல்லது கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்போம் என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நீதிபதி இளஞ்செழியன் களமிறங்க வாய்ப்பில்லை.
ஒருவேளை, இளஞ்செழியன் வேறொரு கட்சியின் வேட்பாளராக களமிறங்கினால் தமிழரசுக் கட்சிக்கும் இளஞ்செழியனுக்கும் இடையிலான போட்டி அதிகரிக்கும்.
அவ்வாறான சூழ்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri