விடுதி ஊழியர்களுக்கு விசித்திர தண்டனை.. பார்த்து ரசித்த பாதாள குழுத் தலைவர்!
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு விசித்திரமான தண்டணையொன்றை பாதாள உலகக் கும்பலொன்று வழங்கியுள்ளது.
குறித்த பாதாள உலகக் கும்பலின் தலைவர், வல்லே சாரங்காவின் சகாக்கள் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது விடுதி ஊழியர்களின் தலைமுடியை முழுவதுமாக வெட்டி, பின்னர் பெண்களின் ஆடைகளை அணிய வைத்து , மாலை அணிவித்து, அவர்களை நடனமாட கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மோசமான செயல்
இந்த மனிதாபிமானமற்ற தண்டனையை டுபாயில் இருப்பதாகக் கூறப்படும் வல்லே சாரங்கா, வீடியோ அழைப்பு மூலம் பார்த்துள்ளார்.

வல்லே சாரங்காவின் சீடர்கள் சிலர் விடுதிக்கு சென்ற போது, ஏற்பட்ட சண்டைக்கு பழிவாங்கும் விதமாக, மூன்று தொழிலாளர்களும் இந்த முறையில் தண்டிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மோசமான செயலை செய்த குழு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam