ஒரு நாடு இரு நீதி : நினைவேந்தல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவாரா அநுர..!
நாட்டில் தன்னுடைய கட்சியானது மேலும் வலுவடையும் என்றும் கட்சி பேதங்களின்றி நாடு முன்னேற்றமடையும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இடம்பெற்ற கார்த்திகை வீரர்கள் தினத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கார்த்திகை வீரர்கள் தினம் என்பது 1988 -1989களில் ஜேவிபியினர் முன்னெடுத்த போராட்டங்களில் உயிரிழந்த கட்சி உறுப்பினர்களை நினைவுகூரும் விதமாக கடந்த நவம்பர் 13ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நாள் ஆகும்.
அந்தவகையில் தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது போரினால் உயிர்நீத்த சொந்தங்களை நினைவுகூரும் ஒரு மாதமாகும்.
அந்த பின்னணியில் அநுரவால் கார்த்திகை வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயதப்போராட்டத்தில் இறங்கியவர்கள்தான் தேசிய மக்கள் சக்தி என தற்போது பெயரிடப்பட்ட ஜேவிபி அரசாங்கம்.
அவ்வாறு ஆயுத போராட்டத்தில் களமிறங்கிய ரோஹண விஜயவீர போன்றவர்களை நினைவுகூரும் அளவிற்கு தற்போதைய அரசாங்கம் ஜனநாயக வழியை கையாள்கின்றது என்றால் இதேபோல தமிழ் மக்கள் காலாதிகாலம் நினைவுகூருகின்ற மாவீரர் தினத்தை எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுஷ்டிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
அந்தவகையில் வரப்போகின்ற மாவீரர் தினமும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இடம்பெறுமா அல்லது ஒரு நாட்டில் இரு நீதியா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் அறியலாம்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |