அமைச்சர் ஒருவரின் கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டது.
இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஜனவரி 23 முதல் ஏப்ரல் 29 வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா மோசடியான பங்கு பரிவர்த்தனை தொடர்பில் வெளிநாட்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த, உதய கம்மன்பில, தனது பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரின் கடவுச்சீட்டை விடுவிக்க நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் கம்மன்பில பல உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட சுற்றுப்பயணங்களில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்திற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.