கோட்டாபயவின் அதிரடியால் அடங்கிய அமைச்சர்கள்! - செய்திகளின் தொகுப்பு(Videos)
இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சுசில் பிரேமஜயந்தவின் பதவியைப் பறித்த பின்னர் அரசாங்கத்தை விமர்சித்துவந்த அமைச்சர்கள் மௌனிகளாக மாறிவிட்டனர் என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட 11 கட்சிகளைக் கொண்ட மாற்று அணியினர், எதனையும் கூறவும் செய்யவும் முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய மாற்று அணியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri