ராஜிதவுக்கு வழங்கினால் ரோஹிதவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும்! ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன, கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் எனவும், இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அமைச்சுப் பதவி
ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக கடந்த சில வாரங்களாக ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலும் கடந்த காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
