13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான இந்தியாவின் நிபந்தனையை ஏற்க முடியாது! ரோஹித அபேகுணவர்த்தன
இலங்கைக்கு ஒவ்வாத 13ஆம் திருத்தச் சட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தச் சொன்னால் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவும் தன்னால் இயன்ற உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றது.
ஆனால், இந்தியா அரசியல் நிபந்தனைகளுடன் தான் உதவிகள் வழங்குகின்றது. சீனா இலங்கைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிப்பதில்லை.
இலங்கைக்கு சீனாவும் முக்கியம்
இலங்கைக்கு இந்தியா எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் சீனாவும் முக்கியம். இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது.

இலங்கைக்கு ஒவ்வாத 13ஆவது திருத்தச் சட்டத்தின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கைக்கு இந்தியா நிபந்தனை விதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேபோல்
இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும்
அதிகளவில் வாழ்கின்றார்கள் என்பதை இந்தியா மறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri