சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த போக்குவரத்துப் பிரதி அமைச்சர்
323 கொள்கலன் சர்ச்சை தொடர்பான குற்றச்சாட்டுகளால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய விடயப்பரப்புகள் அகற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த குற்றச்சாட்டை போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாக மறுத்துள்ளார்.
இன்று(10) நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சுப் பதவி மாற்றியமைக்கப்பட்டமைக்கான காரணம் வேறு என்று விளக்கமளித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் தற்போதைய இலக்கு
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, நகர அபிவிருத்தி அமைச்சு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டதால் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டப்படி, நாடு முழுவதும் பல பல்நோக்கு போக்குவரத்து மையங்களை (multi-modal transport centers) நிறுவவுள்ளதாகவும், இந்த முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் வெற்றிக்கு நகர அபிவிருத்தி இன்றியமையாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நகர அபிவிருத்தி விடயப்பரப்பு போக்குவரத்து அமைச்சின் தற்போதைய இலக்குகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமது முழு வாழ்க்கையையும் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்த பிமல் ரத்நாயக்க போன்ற ஒருவரை, இந்தக் கொள்கலன் சர்ச்சை போன்ற சம்பவத்தின் மூலம் அச்சுறுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இத்தகைய நபர்கள் எங்களைப் புரிந்துகொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இரகசியத்தை சொன்ன அமைச்சருக்கு சிக்கல்! வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய சாட்சியாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
