கடும் மன அழுத்தம்-இரவில் உறங்க முடியாது தவிக்கும் அமைச்சர்
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இரவில் உறங்குவதற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும் சிங்கள வார பத்திரிகையான ஞாயிறு மௌபிம தகவல் வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவேவுக்கே இந்த நிலைமையேற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. தான் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இதன் காரணமாக இரவில் உறங்க தூக்க மாத்திரைகளை உட்கொள்வதாகவும் அமைச்சர் கெஹெலிய தனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.
ஓயாத தொலைபேசி அழைப்புகள்

காலையில் இருந்து இரவு வரை தனக்கு ஓயாமல் தொலைபேசி அழைப்புகள் வருவதே இதற்கு காரணம் என அமைச்சர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். முழு சுகாதார சேவையிலும் காணப்படும் நெருக்கடிகள் பற்றி விசாரிப்பது.
மருந்து தட்டுப்பாடு,ஊழியர்கள் இடையிலான மோதல், சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு சரியான முறையில் சேவைகள் கிடைக்காமை என சுகாதார சேவையில் காணப்ாபடும் கடும் நெருக்கடியான நிலைமை தனது மன அழுத்தங்களுக்கான காரணம் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது நண்பர்களிடம் கூறியுள்ளதாக ஞாயிறு மௌபிமவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri