ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக யாப்பை மாற்ற முடியாது! கெஹெலிய ரம்புக்வெல்ல
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை முக்கியமாக ஆடைத்தொழிலுடன் தொடர்புடையது.குறிப்பாக இலங்கை பொருட்களின் ஏற்றுமதியுடன் தொடர்புடையது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜி.எஸ்.பி பிளஸைப் பொருத்தவரை சில விடயங்களில் நேரடியான தொடர்புகள் காணப்படும் விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, ஆடைத் தொழிற்சாலைகள் ஏதேனும் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றதெனின், அல்லது ஆடைகளின் உற்பத்தித் தரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிட்டால், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிசனைகள் நியாயப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படலாம்.
ஆனால், இலங்கை குடிமக்களின் உரிமையான நாட்டின் அரசியலமைப்பை மாற்றுமாறு கோரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதற்கு ஒரு தனி நிறுவனம் அல்லது அமைப்பின் ஒரு சர்வதேச அமைப்பின் எந்தவொரு நியாயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நிச்சயமாக ஏதோ ஒரு திட்டமிட்ட செயலாகவே இதனை
பார்க்கின்றேன். குடிமக்களின் உரிமைகள் மற்றும் இலங்கையின் இறையாண்மையை
பாதுகாக்கும் அதேவேளையில் இலங்கை வெளிவிகார அமைச்சு இந்த விடயத்தை கையாளும் என்றும் தெரிவித்துள்ளார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam