இலங்கை பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு அமைச்சர் வேண்டுகோள்
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதாக கூறுகின்ற பல எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுகின்றன.
விமான சேவை
"நாங்கள் சாலையில் பட்டினி கிடக்கவில்லை, தெருக்களில் இறக்கவும் இல்லை." இந்த நிலையில் எங்கள் முக்கிய கவனம் இந்தியாவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் நிறைய கலாசார
ஒற்றுமைகளையும் பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது,
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வாரந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட
விமானங்கள் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.