வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக புதிய வசதி அறிமுகம்
புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வகையில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொடுக்க விண்ணப்பம் செய்வதற்காக இந்த செயலியை (Home Delivery App) லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க டொலர்
அதற்கமைய வெளிநாட்டில் இருந்து லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவை அமெரிக்க டொலர்களில் ஓடர் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை கூகுள் பிளே மற்றும் app ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
புதிய செயலி
லிட்ரோ சமையல் எரிவாயு உள்நாட்டு சந்தையில் 80 சதவீத பங்குகளுடன் முன்னணியில் இருப்பதால், மேம்படுத்தப்பட்ட புதிய அம்சமாக இது நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய செயலி தொடர்பான கூடுதல் விவரங்களை 1311 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக லிட்ரோ வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தில் பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
