அமைச்சர் ராஜித ஆரோக்கியமாக இருக்கின்றார்:சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை மறுத்த பேச்சாளர்
முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன(Rajitha Senarathna) காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சில விஷமிகள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான தரப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என ராஜித சேனாரத்னவிற்கு நெருக்கமான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ராஜித சேனாரத்ன மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு சிறந்த ஆரோக்கியமான நிலைமையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராஜித சேனாரத்ன மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam