ஜனாதிபதி வேட்பாளர்! தாமே தகுதியானவர் என்கிறார் நிமல் சிறிபால டி சில்வா
நல்லாட்சியை கொண்டு வர ஜனாதிபதி வேட்பாளராக தாம் அழைக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் என்னிடம் உள்ளன.
ஜனாதிபதி தெரிவு
அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு எனது பெயர், விஜயதாச ராஜபக்ச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
அதில் மிகவும் தகுதியானவர் நானே. 2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வர ஜனாதிபதி வேட்பாளராக என்னையே முதன்முதலில் அழைத்தனர்.
எனினும், கட்சியை விட்டு விலக விரும்பாத காரணத்தினால் தான் அதற்கு தான் இணங்கவில்லை என தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
