அமைச்சர் மஹிந்தானந்த சுயதனிமைப்படுத்தலில் ...
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
தமது பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த அபேசிங்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அறிந்து கொண்டது முதல் தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் பணியாளர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாம் உள்ளிட்டவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் இதில் இரண்டு சாரதிகளுக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமக்கு நடாத்திய முதல் பரிசோதனையில் கோவிட் தொற்று கிடையாது என பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிடடுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு பின்னர் தம்மையோ, தமது பணியாளர்களையோ சந்தித்திருந்தால் அவ்வாறானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கோரியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
