ரஷ்ய பயணிகள் வானுார்தி விடுவிக்கப்படலாம்! நம்பிக்கை வெளியிடும் இலங்கை அரசாங்கம்!
இலங்கை- ரஷ்யா பேச்சு
பண்டாரநாயக்க வானுார்தி நிலையத்தில் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்ய ஏரோஃப்ளோட் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் மற்றொரு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையே தற்போதைய முறுகலுக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
நீதிமன்ற நிலைப்பாடு
கடந்த வியாழன் அன்று மொஸ்கோவில் இருந்து வந்த Aeroflot வானுார்தி, சுமார் 200 பேருடன் விமானம் மாஸ்கோவுக்குத் திரும்ப இருந்தது.கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நீதித்துறை நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் தலையிட முடியாது என்று ரஷ்ய தூதரகத்திற்கு தாம் அறிவித்துள்ளதாகவும், இந்த நிலைமையை ரஷ்ய தூதரகமும் அறிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்த விடயம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், வானுார்தி விடுவிக்கப்படும் என்று நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
