வயாவிளான் மக்களின் காணி பிரச்சினையை தீர்க்க டக்ளஸ் களவிஜயம்
யாழ்ப்பாணம் வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில காணிகள் குறித்த பகுதி மக்களின் காணிகள் என்பதால் அவற்றுக்கு மாற்றிடாக 1980 ஆம் ஆண்டுகளில் சுதந்திரபுரம் எனும் கிராமம் உருவாக்கப்பட்டு காணிகள் வழங்கப்பட்டன.
குறித்த காணியில் உள்ள ஆலயம் மற்றும் தற்போதும் காணி இல்லாமல் இருப்பவர்கள் தமது பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
பிரச்சனைகளுக்கு தீர்வு
இன்றைய தினம் குறித்த மக்களை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர்,
பிரதேச செயலகம் ஊடாக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதுடன் கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்று தர முடியும்'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |