அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் பசிலின் கருத்து! அமைச்சர் வழங்கும் விளக்கம் : செய்திகளின் தொகுப்பு
அரச சேவையும் அரச உத்தியோகத்தரும் நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் ஊழியர்களை நிரப்புவதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
உத்தியோகபூர்வமற்ற அரசியல் தீர்மானங்களைப் பெறுவதற்கும் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கும் ஒவ்வொரு அரசாங்கமும் இடைவிடாது அரச நிறுவனங்களை நிரப்பியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய மதிய நுர செய்திகளின் தொகுப்பு,