உயர் அரச, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை கருவிகளாக பாவித்து மன்னாரில் கனிய மணல் அகழ்வு என குற்றச்சாட்டு (Video)

Government Mannar Schools Banks
By Ashik Feb 14, 2022 10:35 AM GMT
Report

உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களைக் கருவிகளாகப் பாவித்து உரிமங்களைப் பெற்றுக் கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகின்றோம், இந்த மணல் அகழ்வினால் இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எந்த ஒரு நன்மைகளும் இல்லை என மன்னார் சுற்றாடலைப் பாதுகாப்போம் அமைப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மன்னாரில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது 'மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம்' அமைப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,


மன்னாரில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாகக் கனிய மணல் ஆய்வுகள் மிகவும் இரகசியமான முறையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மன்னாரிலுள்ள சுற்றாடலைப் பாதுகாப்போம் அமைப்பு பெற்றுக்கொண்ட தகவல்கள் அடிப்படையில் மதத் தலைவர்கள் பிரஜைகள் குழு பொதுமக்கள் இணைந்து எமது எதிர்ப்பை வெளியிட்டு ஜனாதிபதி வரை தெரிவித்திருக்கிறோம்.

அண்மையில் எங்களோடு கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் எங்களுடைய ஆதங்கங்களைக் கேட்டு இந்த மாதத்தின் இறுதியில் அவுஸ்திரேலிய தூதருடன் மன்னாரில் உள்ள எமது குழுக்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள சனத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மன்னார் தீவுக்குள் வசிக்கிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் அகலமும் 30 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட ஒரு குறுகிய தீவு பகுதி முற்று முழுதாக குறுகிய காலத்தில் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். 1980 ஆம் ஆண்டுகளில் மன்னார் நகரச் செயற்பாடுகளை உயிலங்குளத்தில் அமைப்பது தொடர்பாக ஒரு திட்டம் அரசிடம் இருந்தது. ஒரு சில அரசியல் காரணங்களால் அவை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மன்னார் தீவுக்குள் மாவட்ட செயலகம், பொது வைத்தியசாலை, வங்கிகள் நான்கு தேசிய பாடசாலைகள் என முக்கியமான அனைத்து செயற்பாடுகளும் இந்த தீவுக்குள் தான் இருக்கிறது. இந்த மணல் அகழ்வுகள் தொடருமாக இருந்தால் கடலுக்குள் மூழ்கி மன்னார் மாவட்டம் செயலிழந்து சூனியப் பிரதேசமாக மாறிவிடும்.

ஆகவே எங்களால் முடிந்த அளவு மக்களைத் திரட்டி அரசு அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி வரை எங்களுடைய ஆதங்கத்தைத் தெரியப்படுத்துகிறோம். தொடர்ந்து தெரியப்படுத்துவோம்.

ஆனால் தாங்கள் எந்த அளவுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றோமோ அந்த அளவிற்கு அவுஸ்திரேலிய நிறுவனம் இதை ஆய்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.

எமது எதிர்ப்புகளால் புவிச்சரிதவியல் திணைக்களம் இதற்கான உரிமத்தை நிறுத்தி இருந்தது ஆனால் தற்போது ஆராய்ச்சி செய்வதற்கு புவிச்சரிதவியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அது எவ்வாறு நடைபெற்றது என்பதை எங்களால் அறிய முடியாமல் இருக்கிறது. இதில் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் இந்த கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற உயர் அரச அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது என்று கை விரிக்கின்றார்கள்.

எது எப்படி இருந்தாலும் உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களைக் கருவிகளாகப் பாவித்துத் தான் இந்த உரிமங்களைப் பெற்றுக் கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகிறோம்.

இந்த மணல் அகழ்வினால் இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள , முஸ்லிம் மக்களுக்கு எந்த ஒரு நன்மைகளும் இல்லை. இதனால் ஆதாயம் பெறப் போவது அந்நிய நாடுகளும் அவர்களோடு சேர்ந்த இயங்குகின்ற சில முகவர்களும் தான் என தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US